அமெரிக்காவின் தாக்குதலில் 06 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி!

You are currently viewing அமெரிக்காவின் தாக்குதலில் 06 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நடத்திய ரொக்கட் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் தாக்குதலுக்குத் திட்டமிட்ட ஐ.எஸ்.கோ தீவிரவாதகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. எனினும் இத்தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்களே கொல்லப்பட்டதாக ஆப்கானில் இருந்து வெளியாகும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தாலிபன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கொல்லப்பட்டவர்களில் சிலர் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியவர்கள். சிலரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா உள்ளதும் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் சுமையா என்ற இரண்டு வயதுக்கு குழந்தை, ஃபர்சாத் என்ற 12 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 06 சிறுவர்கள் அடங்குகின்றனர்.

கொல்லப்பட்டவர்கள் குடும்பமாக அமெரிக்காவுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்துக் காத்திருந்தனர். விமான நிலையத்துக்குச் செல்வதற்கான தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்தவர்கள் என அவர்களின் உறவினர் ஒருவரான அகமதி என்பவர் பி.பி.யிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படையினருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய நாசர் என்ற மற்றொரு உறவினரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அவா் கூறினார். அமெரிக்கா மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது எனவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்காவின் மத்திய படைப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. எனினும் 10 பேர் எப்படி இறந்தார்கள்? என்பது இன்னும் தெளிவாக இல்லை எனவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் வாகனத்தில் அதிக அளவில் வெடிபொருள்கள் இருந்திருக்கலாம். இதுவே அடுத்தடுத்த வெடிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என அமெரிக்கா மத்திய படைப்பிரிவு இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments