அமெரிக்காவிற்கு எதிராக ராணுவத்தில் சேர துடிக்கும் வட கொரியர்கள்!

You are currently viewing அமெரிக்காவிற்கு எதிராக ராணுவத்தில் சேர துடிக்கும் வட கொரியர்கள்!

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுமார் 8,00,000 பேர் ராணுவத்தில் சேர விரும்புவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பதற்றம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்தனர்.

இதனை வட கொரியா ”ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியதுடன், வட கொரியா தனது Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) கொரிய தீபகற்ப கடல் பிராந்தியத்தில் ஏவியது.

அத்துடன் இது அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு வலுவான எச்சரிக்கை என்றும் கண்டித்து இருந்தது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 8,00,000 வட கொரியர்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அந்த நாட்டின் ராணுவத்தில் சேர்ந்து போரிட முன்வந்துள்ளனர் என்று வட கொரியாவின் அரசு செய்தித்தாள் ரோடாங் சின்முன் மேற்கோள் காட்டி CNN தெரிவித்துள்ளது.

இந்த செய்தியானது, வட கொரியா தனது Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியதை அடுத்து வெளிவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments