அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிடத்தக்க, ஆட்கள் அதிகமற்ற சில பகுதிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என்றும் சிறு குழுக்களாக கூடும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் சலூன், அருங்காட்சியகம், சினிமா திரையரங்கம் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்றும் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையில் 30 வீதம் பேர் 4 இதுவரை முழு அளவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. அத்துடன் 42 வீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.