அமெரிக்காவில் கொரோனா : வைரஸ் பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி!

  • Post author:
You are currently viewing அமெரிக்காவில் கொரோனா : வைரஸ் பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி!

உலக அளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில், 435,160 பேருக்கு கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் 14,797 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால், அமெரிக்காவில் வசித்து வந்த 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 16 இந்தியர்களுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அனைத்து இந்தியர்களும் ஆண்களே ஆவர். பலியானவர்களில் 4 பேர் taxi ஓட்டுநராக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

பணி நிமித்தமாகவும், கல்வி கற்கவும் அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை கண்டறிந்து உதவும் பணியில் இந்திய தூதரகமும் , இந்திய அமெரிக்க வம்சாவளி அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.

பகிர்ந்துகொள்ள