அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘ஜுலியன்’ என்ற ஏல நிறுவனம் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்களை நேற்று முன்தினம் ஏலத்தில் விற்பனை செய்தது.
இதில் 1978-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர்மேன்’ படத்தில் சூப்பர் மேனாக நடித்திருந்த கிறிஸ்டோபர் ரீவி அணிந்திருந்த உடை 1 லட்சத்து 93 ஆயிரத்து 750 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரம்) ஏலம் போனது.
சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றின் உடை இந்தளவுக்கு அதிக தொகைக்கு ஏலம் போனது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.