11.04.20 (இன்று) 20,000ற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தினமும் சராசரி 2000 பேர் அமெரிக்காவில் இறந்துள்ளனர்.
அரை மில்லியனிற்கும் மேலானோரிற்கு அமெரிக்காவில் கொறோனா தொற்றேற்பட்டுள்ளது. இதுவரை 29,000 பேர் குணமாகியுள்ளனர்.
இதேவேளை
கொவிட்-19 மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நாடான இத்தாலியில் இது வரை 19,468 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இத்தாலியில் நிலைமை மெதுவாக சரியாகின்றது. எனினும் அமெரிக்காவில் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு நியூயோர்க்கில் அரசுப்பள்ளிகள் செப்ரெம்பர் மாதம் வரை மூடப்படுகின்றன.
“இந்த பள்ளியாண்டில் பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது” என நியூயோர்க்கின் மேயர் பில் டெ பிலாசியோ கூறியுள்ளார்.
மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா