அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

  • Post author:
You are currently viewing அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இப்பொழுது 61 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், 3 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

  • அமெரிக்காவில் நேற்றைய தினம் புதிதாக 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுக்கள் உட்பட, இதுவரை மொத்தம் 18 இலட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 500 க்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
  • பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகின்றது.
  • ரஷ்யாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது, ஸ்பெயினில் 2 லட்சத்து 86 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகளவில் இதுவரை 27 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள