அமெரிக்க, கனேடிய, பிரித்தானிய தூதுவர்களுடன் அலி சப்ரி சந்திப்பு!

You are currently viewing அமெரிக்க, கனேடிய, பிரித்தானிய தூதுவர்களுடன் அலி சப்ரி சந்திப்பு!

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கையின் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பிலான புதிய தீர்மானத்திற்கான வரைவு இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு 01 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களை அவர் தெளிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இலங்கை குறித்த புதிய தீர்மானது, நாட்டின் அரசியலமைப்பினை மீறுவதாக அமைந்திருப்பதாக இராஜதந்திரிகளிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய தீர்மானத்தில் இறுதி உள்ளடக்கத்தில் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கேரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளில் அமெரிக்கா, பிரித்தானிய,கனடா உள்ளிட்ட நாடுகளின் கரிசனைகளும் ஒத்துழைப்புக்களும் தொடரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments