அமெரிக்க தாக்குதலில் ஈரானிய இராணுவத்தளபதி கொல்லப்பட்டார்!

You are currently viewing அமெரிக்க தாக்குதலில் ஈரானிய இராணுவத்தளபதி கொல்லப்பட்டார்!

ஈரானின் அதி முக்கிய இராணுவத்தளபதிகளில் ஒருவரான “காஸிம் சுலைமானி” அமெரிக்கட்ரோன் தாக்குதல்” மூலம் இன்று கொல்லப்பட்டார்.

மத்தியகிழக்கில் அதி முக்கியம் வாய்ந்தவராக கருதப்பட்ட இந்த ஈரானிய இராணுவத்தளபதயும்அவரோடு பயணித்த வேறும் சில ஈரானிய இராணுவ பிரதானிகளும்ஈராக் தலைநகர் பக்தாத்தில்வைத்து அமெரிக்க இராணுவத்தால் நடாத்தப்பட்ட “ட்ரோன் தாக்குதல்” மூலம்கொல்லப்பட்டதாகவும், “காஸிம் சுலைமானி” கொல்லப்படுவதற்கான நேரடி உத்தரவை அமெரிக்கஅதிபர் “டொனால்ட் ட்ரம்” வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான்பழிக்குப்பழி நடவடிக்கைக்கு முகம்கொடுப்பதற்கு அமெரிக்கா தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.

இச்சம்பவம் உலகமட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடுஅமெரிக்காவிலும்இந்நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளனஈராக்கில் பல்லாண்டுகளாக நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப்படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அதிபர் ட்ரம்ப்உறுதியளித்ததற்கு நேர்மாறாகஅமெரிக்காவோடு எப்போதும் உரசல் நிலையில் இருந்து வந்தஈரானின் அதி பிரதான இராணுவத்தளபதியை அமெரிக்க அதிபர் கொல்வதற்கு உத்தரவிட்டமைநிலைமையை பெரும் சிக்கலுக்குள் தள்ளி விட்டிருப்பதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள்கருத்துரைத்திருக்கின்றன.

முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலத்தின் பின்னதாக அமெரிக்க அதிபர்களாக இருந்தரொனால்ட் ரீகன்புஷ் போன்றவர்களின்மத்தியகிழக்கின் மீதான படையெடுப்புக்களால் சரிந்துள்ளஅமெரிக்கப்பொருளாதாரம்இன்னும் படுகுழிக்கு தள்ளப்படும் வகையில்தற்போதைய அதிபர்ட்ரம்பின் நடவடிக்கைகள் இருப்பதாக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அமெரிக்காமீது பழிவாங்கல் நடவடிக்கையை எடுக்க உள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில்ஈராக்கிலுள்ள அனைத்து அமெரிக்கர்களையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறுஅமெரிக்கா பணித்துள்ளது.

பல்லாண்டுகளாக உரசல் நிலையில் இருந்து வந்த அமெரிக்க – ஈரான் நாடுகளுக்கிடையிலானமுறுகல் நிலைஇத்தாக்குதலினால் கொதிநிலைக்கு உயர்த்துள்ளதுஇன்னமும் நீண்ட காலத்திற்குஅமெரிக்கப்படைகள் மத்தியகிழக்கில் நிலை கொள்ளவேண்டிய கட்டாயம்இத்தாக்குதல மூலம்அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளதால்ஏற்கெனவே சரிந்துகிடக்கும் அமெரிக்கப்பொருளாதாரம்மட்டுமல்லாமல்அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொருளாதார உதவிகளைவழங்கிவரும் “நேட்டோ” நாடுகளின் பொருளாதாரமும் மிகக்கடுமையான பாதிப்புக்களைசந்திக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள