11.09.2001 அன்று அமெரிக்க உலக வர்த்தகமையத்தின் இரட்டைக் கோபுரங்கள், பென்ரகன் தலைமையகம், பென்ஸில்வேனியா மீதான விமானத் தாக்குதல்களின் பின்னணியில் சவூதி அரேபியர்களின் இறுக்கமான பங்களிப்பு இருப்பதாக, அமெரிக்க FBI நிறுவனம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்கஅதிபர் Joe Biden அவர்களின் விசேட உத்தரவின் பேரில் இவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதே வேளை, குறித்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உறவினர்கள், அமெரிக்க அதிபருக்கு கூட்டாக விடுத்திருந்த வேண்டுகோளையடுத்தே அதிபர் Biden இவ்வுத்தரவை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சவூதி அரேபியா இத்தகவல்களை மறுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
11.09.2021 அன்று நடைபெற்ற இத்தாக்குதல்களையடுத்து, நோர்வேயின் வான்பரப்பில் பறக்கும் சந்தேகத்துக்குரிய பயணிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் அதிகாரத்தை நோர்வே வான்படைக்கு உடனடியாக வழங்கியிருந்ததாக, அன்றைய நோர்வே பிரதமரும், இன்றைய நேட்டோ கூட்டமைப்பின் தலைவருமான Jens Stoltenberg தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவோடு மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் நோர்வே, அமெரிக்க மற்றும் நேசநாட்டுப்ஙடைகளின் இராணுவ நடவடிக்கைகளில் காத்திரமான பங்காற்றிவருவதால், அமெரிக்க தாக்குதல்களையடுத்து, நோர்வேயிலும் இவ்வாறான பயங்கரவாத்தாக்குதல்கள் நடைபெறலாமென உளவுத்துறை எச்சரித்ததன் அடிப்படையில் குறித்த உத்தரவை தான் வழங்கியிருந்ததாகவும், நோர்வே வான்படையின் F-16 இரக தாக்குதல் விமானங்கள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.