அமெரிக்க தாக்குதல்களின் பின்னணியில் சவூதி அரேபியர்கள்..?

You are currently viewing அமெரிக்க தாக்குதல்களின் பின்னணியில் சவூதி அரேபியர்கள்..?

11.09.2001 அன்று அமெரிக்க உலக வர்த்தகமையத்தின் இரட்டைக் கோபுரங்கள்பென்ரகன் தலைமையகம்பென்ஸில்வேனியா மீதான விமானத் தாக்குதல்களின் பின்னணியில் சவூதி அரேபியர்களின் இறுக்கமான பங்களிப்பு இருப்பதாகஅமெரிக்க FBI  நிறுவனம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில்அமெரிக்கஅதிபர் Joe Biden அவர்களின் விசேட உத்தரவின் பேரில் இவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதே வேளைகுறித்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உறவினர்கள்அமெரிக்க அதிபருக்கு கூட்டாக விடுத்திருந்த வேண்டுகோளையடுத்தே அதிபர் Biden இவ்வுத்தரவை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும்சவூதி அரேபியா இத்தகவல்களை மறுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

11.09.2021 அன்று நடைபெற்ற இத்தாக்குதல்களையடுத்துநோர்வேயின் வான்பரப்பில் பறக்கும் சந்தேகத்துக்குரிய பயணிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் அதிகாரத்தை நோர்வே வான்படைக்கு உடனடியாக வழங்கியிருந்ததாகஅன்றைய நோர்வே பிரதமரும்இன்றைய நேட்டோ கூட்டமைப்பின் தலைவருமான Jens Stoltenberg தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தாக்குதல்களின் பின்னணியில் சவூதி அரேபியர்கள்..? 1
அன்றைய நோர்வே பிரதமர் Jens Stoltenberg, தனது கட்சி உறுப்பினரான Støre உடன்…

அமெரிக்காவோடு மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் நோர்வேஅமெரிக்க மற்றும் நேசநாட்டுப்ஙடைகளின் இராணுவ நடவடிக்கைகளில் காத்திரமான பங்காற்றிவருவதால்அமெரிக்க தாக்குதல்களையடுத்துநோர்வேயிலும் இவ்வாறான பயங்கரவாத்தாக்குதல்கள் நடைபெறலாமென உளவுத்துறை எச்சரித்ததன் அடிப்படையில் குறித்த உத்தரவை தான் வழங்கியிருந்ததாகவும்நோர்வே வான்படையின் F-16 இரக தாக்குதல் விமானங்கள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments