அமெரிக்க நிதியமைச்சகம் மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“Reuters” செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில், “குறிப்பிட்ட” நாடு ஒன்றின் ஆதரவோடு இயங்கும் இணையவழி தாக்குதலாளர்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், அமெரிக்க நிதியமைச்சகத்தின் பல இரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அதேவேளை, நாட்டின் பிரதான இணையவலை தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவையும் இவ்விணையவழி தாக்குதலால் பதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிநவீன தொழிநுட்பத்தை பாவித்து நடத்தப்படும் இவ்விணையவழி தாக்குதல்கள் பற்றி ஆய்வு செய்த அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை, இவ்வாறான நவீன முறைமைகளை கையாண்டு அமெரிக்காவின் ஏனைய அமைச்சகங்களும் தாக்குதலுக்குள்ளாகலாம் எனவும், தற்போது நடத்தப்பட்டுள்ள நிதியமைச்சு மீதான தாக்குதல் மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளதாகவும் “Reuters” மேலும் தெரிவித்துள்ளது.