கொங்கோ குடியரசில் தற்போது அதிகரிகத்து வரும் அம்மை தொற்று நோயினால் சுமார் 6000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாது தற்போது அங்கு பரவிவரும் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக அதிக நிதி தேவை படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அந்நாட்டில் ஆயுத பேராளிகளின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியர்கள் சிலர் உயிரிழந்துள்ளதால் அங்கு நோயிற்கு சிகிச்சை அழிப்தற்கு வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்கும் மருந்து வகைகள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவு நிதி தேவைப்படுவதால் உலக சுகாதார ஸ்தாபனம் நிதியினை கோருகின்றது.
வரலாற்றில் இதுவரையில் கண்டிராத அளவு கொங்கோவில் அதிகளவிலான சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.