அமெரிக்க செல்வந்தரான “Jeffrey Epstein” மீது சுமத்தப்பட்ட சிறுவர் பாலியல்குற்றச்சாட்டுக்களை அறிந்திருந்தார் அல்லது குற்றங்களில் பங்கெடுத்தருந்தார் என, பிரித்தானியஇளவரசர் “ஆண்ட்ரூ (Andrew)” குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை நினைவிருக்கலாம்.
தனக்கு சொந்தமான தனித்தீவொன்றில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளை தடுத்து வைத்து பாலியல்பலாத்காரத்திற்கு உட்படுத்தினாரென்ற குற்றச்சாட்டின் பின்னதாக, அமெரிக்க செல்வந்தரான“Jeffrey Epstein” அமெரிக்க F.B.I. இனரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
“Jeffrey Epstein” மீது சுமத்தப்பட்ட சிறுவர் பாலியல் பலாத்கார சம்பவங்களோடு புகழ்பெற்றஅதிமுக்கிய நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்ட F.B.I. யினர், “Jeffrey Epstein” யின் மிக நெருக்கமான நண்பர்களில் பிரித்தானிய இளவரசர் “ஆண்ட்ரூ” வும் அடங்குவதாகவும், குற்றச்செயல்கள் தொடர்பாக இளவரசர் தகவல்களை அறிந்திருக்கலாம் அல்லது அவரும்நேரடியாக குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், அதற்கானவிசாரணைகளுக்கு இளவரசர் ஒத்துழைக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக F.B.I. இனரிடம் சம்மதம் தெரிவித்திருந்தஇளவரசர், பின்னதாக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம்
“Jeffrey Epstein” அமெரிக்க சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்து போனதையடுத்து, விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்திருந்தார்.
அமெரிக்க செல்வந்தரான “Jeffrey Epstein” சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்றதகவல்களின் பின்னணியில் மர்மங்கள் இருப்பதாகவும், தன்னோடு சேர்த்து சிறுவர் பாலியல்பலாத்காரங்களை புரிந்த மிகமுக்கியமான மனிதர்களின் பங்களிப்போடு அவர் சிறையில் வைத்துஉயிரிழக்க செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவும் இப்போதைய நிலையில், இந்தவழக்கு சிக்கல் நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையில், குற்றச்சாட்டுக்களோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளவரசர்“ஆண்ட்ரூ” மீது அதிருப்திகள் வெளியிடப்பட்ட நிலையில், சமீபத்தில் இளவரசர் வழங்கியிருந்ததொலைக்காட்சி செவ்வியொன்றில்,
“Jeffrey Epstein” உடனான தனது நட்பை நியாயப்படுத்தி இளவரசர் கருத்துதெரிவித்திருப்பதையடுத்து அவர்மீதான விமர்சனங்கள் இன்னமும் கடுமையாகயுள்ளன.
இதையடுத்து கோபமடைந்த பிரித்தானிய மகாராணியார், சம்பிரதாயபூர்வமாக வழங்கப்பட்டுவரும், இளவரசருக்கான அரண்மனை மரியாதைகளையும், அரச மரியாதைகளையும் நிறுத்தி வைக்கும்படிஉத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வரவிருக்கும் இளவரசரின் 60 ஆவது அகவைநாளில் அவருக்குவழங்கப்படவிருந்த சம்பிரதாயபூர்வமான பிரித்தானிய தேசியக்கொடி மரியாதையை பிரித்தானியஅரசு நிறுத்தியுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய கடற்படையிலும், வான்படையிலும் இளவரசர் “ஆண்ட்ரூ” ஆற்றியசேவைகளுக்காக அவருக்கு வழங்கப்படவிருந்த உயர் இராணுவ விருதுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இளவரசரை தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்க F.B.I. தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.