“கொரோனா” பரவலால் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கும் நோர்வே! ஆய்வுகள் தெரிவிப்பு!!

You are currently viewing “கொரோனா” பரவலால் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கும் நோர்வே! ஆய்வுகள் தெரிவிப்பு!!

“கொரோனா” பரவலால், நோர்வே கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கவிருப்பதாக பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுவரையிலும், “கொரோனா” பாதிப்புக்களுக்குள்ளான நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு மாத்திரமே தொற்று இருந்தது என்ற நிலைமை மாறி, எங்கிருந்து, யாரால் தொற்று வந்தது என கண்டறிவதே இயலாத நிலையொன்றுக்குள் நோர்வே சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனிக்காலத்தையடுத்து நெருங்கிவரும் இளவேனில் காலத்தில் அதிகரிக்கத்தொடங்குமென எதிர்பார்க்கப்படும் “கொரோனா” பரம்பல், கோடைகாலம் முழுவதும் அதியுச்சத்தில் இருக்குமெனவும் அஞ்சப்படும் நிலையில், தொடர்ந்துவரும் இலையுதிர்காலத்தில் மந்தநிலைக்கு வருமெனவும் கூறப்படுகிறது.

சுமார் ஒருவருட காலத்துக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் “கொரோனா” வைரஸின் பரம்பலால் நோர்வேயில் ஆகக்கூடியது 60 சதவிகிதமான மக்கள் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

நாட்டிலிருந்து முற்றாக “கொரோனா” வைரஸை அழித்துவிடும் சாத்தியமில்லை என தெரிவித்திருக்கும் நோர்வே சுகாதாரத்துறை, எனினும், நாட்டின் சுகாதாரத்துறை மந்தமடைந்துவிடாத வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், நோர்வேயில் அவசரகாலநிலைமையை கொண்டுவரும் அவசியம் இன்னும் ஏற்படவில்லையெனவும் நோர்வே சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள