அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர் பௌத்த பிக்குகள்!

You are currently viewing அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர் பௌத்த பிக்குகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மத குருமாரும் வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்துடன் ஒன்றிணையும் வண்ணம் இந்த போராட்டங்களை மதத் தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி நேற்று (7) கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பெளத்த மத தேரர்கள் புறக்கோட்டை நோக்கி பேரணி ஒன்றினை ஆரம்பித்து புறக்கோட்டையில் சத்தியாகிரகம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் சர்வ மதத் தலைவர்கள் இணைந்து வத்தளையில் நேற்று அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை ஆரம்பித்து புறக்கோட்டை வரையில் அதனை முன்னெடுத்தனர்.

அத்துடன் சிலாபத்திலிருந்து கத்தோலிக்க மத அருட்தந்தையினரும் அருட் சகோதரிகள் உள்ளிட்ட பொது மக்கள் பேரணியொன்றினை ஆரம்பித்துள்ளதுடன் நேற்று அப்பேரணி நீர் கொழுமபை வந்தடைந்தது. அப்பேரணியானது 9 ஆம் திகதி கொழும்பு – கோட்டை கோட்டா கோ கமவை வந்தடையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் 9 ஆம் திகதி, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இஸ்லாமிய மதத் தலைவர்களான மெளலவிமாரும் பேரணியாக கோட்டா கோ கம நோக்கி செல்லவுள்ளனர்.

நேற்று ( 7) பல அமைப்புக்களை பிரதி நிதித்துவம் செய்யும் தேரர்கள், கோட்டை ரயில் நிலையத்தில் ஒன்று சேர்ந்து பேரணியாக புறக்கோட்டை – ஓல்கொட் மாவத்தை ஸ்ரீ போதிருக்காராம விகாரைக்கு முன்பாக சென்று அங்கு சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்தனர். ‘ சுரகிமு ஸ்ரீ லங்கா (இலங்கையை பாதுகாப்போம்)’ அமைப்பின் தேசிய அமைப்பாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், களுபோவில பதும தேரர் உள்ளிட்டோரின் வழி நடத்ததலில் நூற்றுக்கணக்கான தேரர்கள் இந்த சந்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

குறித்த தேரர்களுக்கு கொழும்புக்குள் நுழையவும் புறக்கோட்டை பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததாக பொலிஸ் தலைமையகம் அறிவித்த போதும், நேற்று ( 7) அந்த உத்தர்வு நீதிமன்றினால் திருத்தப்பட்டு அந்த தடை அகற்றப்பட்டது.அதன்படி கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த தேரர்கள், ‘ பொய்யை தோற்கடிப்போம், நியாயத்தை நிலை நிறுத்துவோம் ‘ எனும் தொனிப் பொருளில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்கள் தற்போது புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் தர்காலிக கூடாரம் அமைத்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். கத்தோலிக்க மதத் தலைவர்களின் பேரணி : கத்தோலிக்க மதத் தலைவர்களின் கீழான பொது மக்கள் கொழும்பு நோக்கி முன்னெடுத்துள்ள பேரணி நேற்று ( 7) சிலாபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டா – ரணில் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி இந்த பேரணி ஆரம்பிக்கப்ப்ட்டது. அந்த பேரணி நேற்று ( 7) நீர்கொழும்பை வந்தடைந்த நிலையில், நாளை (8) வத்தளையை வந்தடையவுள்ளது. நாளைமறுதினம் (9) வத்தளையிலிருந்து கொழும்பு கோட்டையை அப்பேரணி வந்தடையும். வத்தளை சர்வ மத ஆர்ப்பாட்டப் பேரணி : இந் நிலையிலேயே நேற்று வத்தளையிலிருந்து ஓமல்பே சோபித்த தேரர் உள்ளிட்டோரின் தலைமையிலான சர்வமத தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று அரசாங்கத்துக்கு எதிராக நடாத்தப்பட்டது. ‘ 7 ஆம் திகதி சுற்ரிவளைப்போம், 9 ஆம் திகதி விரட்டியடிப்போம் எனும் பிரதான தொனிப்பொருளில் இந்த சர்வ மத பேரணி நடாத்தப்பட்டது. இதில் பெளத்த தேரர்கள், கத்தோலிக்க அருட் தந்தையினர், அருட் சகோதரிகள், மெளலவிமார், இந்து குருமார் உள்ளிட்டோரும் பொது மக்களும் பங்கேற்றனர். வத்தளையில் ஆரம்பித்த இந்த பேரணி, ஹெந்தலை சந்தி, முகத்துவாரம், மட்டக்குளி ஊடாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அடைந்து அங்கிருந்து புறக்கோட்டை வரை சென்றது. மேலும் சில ஆர்ப்பாட்டங்கள் : இதனிடையே கொழும்பில் மட்டும் மேலும் சில போராட்டங்களும் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றன. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஊடகவியலாளர்கலும் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுத்தனர். அத்துடன் நுகேகொடையிலிருந்து பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் துவிச்சக்கர வண்டி பேரணி ஒன்றினை கொள்ளுபிட்டி வரை நடாத்தி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments