கொரனா வைரஸ் தற்போது இலங்கைத் தீவையும் அது தற்போது அட்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது. கொரனா வைரஸ் தொடர்பான அச்சம் மக்களை ஆட்கொண்டிருக்கின்ற இந்த ரேநத்தில் அரச இயந்திரம் கொரனா வைரஸ் தொடர்பாக எடுக்கின்ற நடவடிக்கைகள் எமது மக்களை மேலும் அச்சம் கொள்ள வைத்திருக்கின்றது.
கொரான வைரஸ் தொற்று உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படுகவர்களை தனிமைப்படுத்துவதற்கான மையங்கள் இன்று தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அமைக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட இவ் தனிமைப்படுத்தல் மையங்கள் தற்போது வவுனியா மன்னார் என்று தொடர்கின்றன.
அன்று மனித குலத்திற்கே ஒவ்வாத முறையில் உயிர் கொல்லும் நச்சு ஆயுதங்களுடன் கொடிய இனவழிப்பு யுத்ததினை நடாத்தி தமிழ்மக்களை கருவறுத்த இதே சிங்கள தேச அரசாங்கம் இன்று ஒரு கொடிய வைரஸ் தொற்று உள்ளவர்கள் என்று சந்தேகம் உள்ளவர்களை தமிழர் பிரதேசங்களில் தனிமைப்படுத்த முயல்வது மீண்டும் ஒரு இனஅழிப்பை எம் மீது மேற்கொள்ள முனைகின்றதா என்று தமிழர் மனங்களில் எழுகின்ற சந்தேகம் நியாயமானது தான்.
கொரனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்ப டுகவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்திற்கும் இடம் இல்லை. ஆனால் அதற்கு பொருத்தமான இடத்தினை திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும்.
கொரனா வைரஸ் தொற்று உள்ள நாடுகளில் இருந்து வகைதரும் விமானங்களை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினை விடுத்து அம்பாந்தோடையில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி அதற்கு அருகிலேயே சன நடமாற்றம் அற்ற பகுதியில் தனிப்படுத்தல் மையங்களை அமைந்து பயணிகளில் கொரனா வைரஸ் தொற்று உள்ளவர்களை அங்கு தனிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல்,
இன்று கட்டநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளில் கெரான வைரஸ் தொற்று உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படுகவர்களை 224 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வவுனியாவுக்கும் 289 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மட்டக்களப்பிற்கும் ஏன் கொண்டு செல்ல வேண்டும்?
அது மட்டுமின்றி வவுனியாவில் கொரான தொற்று உள்ளவர்கள் என்று சந்தேகப்படுபவர் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வவுனியாவில் இருந்து 57 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அனுராத புர போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் 139 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யாழ்.போதனா வைத்தியாலைக்கு ஏன் கொண்டு வரப்பட வேண்டும்.
ஒன்று அனுராதபுர வைத்தியசாலையை விட யாழ்.போதனா வைத்தியசாலை இக் கொரனா வைரஸ் தொடர்பான சிகிச்சை முறையில் சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லது அங்கு கொண்டு சென்றால் சிங்கள தேசத்து மக்கள் பயம் கொள்ளவர் அவர்களை அசௌகரியப்படுத்த கூடாது அவர்களின் இயல்புநிலையைக் குழப்பக்கூடாது அதனால் யாழ்.போதன வைத்தியா சாலைக்கு கொண்டு சொல்வோம் என்ற அடிப்படையிலும் இருக்கலாம்.
ஏன்எனில் அண்மையில் வெளிநாட்டு மருத்துவ கழிவுகள் உட்பட பல கழிவுப் பொருட்களை கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு தெல்லிப்பளையில் எரியூட்டப்பட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன.
அந்தவகையில் தற்போது உருவாக்கப்படுகின்ற கொரான வைரஸ் தனிமைப்படுத்தல் மையங்கள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்வதில் நியாபாடுகள் பல உள்ளன.
பரிசோதனைகள் செய்து பார்பதற்கும், தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்கும், வெளிநாட்டுக் குப்பைகளை எரிப்பதற்கும் இலங்கைத் தீவில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா ? அல்லது தமிழர் தேசம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற வினாவும் எழாமல் இல்லை.
எனவே பல துன்பங்களையும் நெருக்கடிகளைலும் அவலங்களையும் அனுபவித்து தற்போது சற்று மேலெழுந்து வரும் எமது மக்களின் இயல்புவாழ்வினை குழப்புகின்ற அச்சம் கொள்ள வைக்கின்ற இவ்வறான திட்டங்களினையும் செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிப்பதோடு இத் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்த பொருத்தமான இடங்களிளைத் தெரிவு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.
வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி