கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் ! – இளைஞர் கைது!

You are currently viewing கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் ! – இளைஞர் கைது!

கிளிநொச்சி, முரசு மோட்டை கோரக்கன் கட்டு குடியிருப்பு  பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு (14-03-2020) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  காவல் துறையினர்  தெரிவித்தனர்

கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில்  ஈடுப்பட்டு வருகின்ற நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெடிப்பு சம்பவம்&  இடம்பெற்றதையடுத்து  அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது  ஒரு தொகை வெடி பொருட்களுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ; இராணுவத்தினர்,  கிளிநொச்சி காவல் துறையிடம் ஒப்படைத்ததையடுத்து மேலதிக விசாரனைகளை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள