தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் எமக்கு தமிழீழமே எமக்கு வேண்டும் எனவும் சர்வதேச நாடுக்கு உரத்துச்சொல்லும் ,மனித நேய ஈருருளிப்பயணம் நேற்று மாலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையை வந்நதடைந்தது. இன்று திங்கட் கிழமை 06/03/2023 நடைபெறும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நடைபெறவுள்ளது இம்மாபெரும் போராட்டத்திற்கு அனைத்து மக்களையும் இணைந்து கொள்ள அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 நாட்களாகப் பிரித்தானியா , நெதர்லாந்து , பெல்சியம் , லுட்சம்பூர்க்,யேர்மனி , பிரான்சு சுவிசு நாடுகளில் முக்கியமான அரசியல் மையங்களாக இருக்கக்கூடிய பிரித்தானிய பிரதமர் வதிவிடம்,அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியம், மாநகரசபைகள், ஐரோப்பிய ஆலோசனை அவை, ஐரோப்பிய பாராளுமன்றம்… மற்றும் நகர பிதா,முதல்வர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், உள் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் , பன்னாட்டு ஊடகங்கள், பல்லின வாழ்மக்கள் என அனைவரிடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 52 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு சிங்களப் பேரினவாத அரசுகள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு,சிங்களப்பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு எனவும் அதற்கு நம் வாழிட நாடுகள் குரல்கொடுக்க் வேண்டும் எனவும் பறைசாற்றியபடி பயணித்திருந்தது.
இப்போராட்டம் பல நெடும் தூரம் இன்னல்களோடு பயணித்து இக் கடும் குளிர் காலத்தில் ,அவற்றைப் பொருட்படுத்தாது தமிழர்கள் வீறு கொண்டு முன்னெடுக்கும் அரசியல் வெளிப்பாடாக அமையப்பெற்றுள்ளது.
இன்று (06/03/2023 ) நடைபெறும் அரசியல் உயர்மட்ட சந்திப்புக்கள், அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ,மிகப் பெரும் கவனயீர்ப்பு போராட்டத்துடன் மாலை நிறைவடையவுள்ளது. எனவே அனைவரும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு ,
எமக்கு கிடைக்கப் படவேண்டிய நீதியினை ஐ.நாவின் செவிப்பறைகள் முழங்க பறைசாற்ற காலம் அழைத்து நிற்கின்றது.
காலம் எமக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து உறவுகளும் உங்கள் வரலாற்றுக் கடமையினை ஆற்றி ,தமிழீழமண்ணை மீட்க நடைபெறும் அறவழிப்போராட்டத்தில் பங்குகொள்ள வாருங்கள் .
“அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது”
– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”