அல்வாயில் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு.!

You are currently viewing அல்வாயில் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு.!

மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரை விஸ்வர்யாவின் கணவரும் சட்டத்தரணியுமான 40 வயதுடைய சிவராசா நிகாஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி தேநீர் வழங்கியுள்ளார்.

பின்னர், இரவு 7 மணியளவில் உடல்நலக் குறைவினால் நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply