பொது அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவர் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழரசு கட்சியின் 8 உறுப்பினர்களும் வாக்களிக்காமல் வெளியேறியுள்ளனர், இதனால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






