ஆகமவிதிப்படி கட்டப்பட்ட நோர்வேயின் முதலாவது சைவக்கோவில் திருமுழுக்கு!

You are currently viewing ஆகமவிதிப்படி கட்டப்பட்ட நோர்வேயின் முதலாவது சைவக்கோவில் திருமுழுக்கு!

நோர்வே தலைநகர் “ஒஸ்லோ” வில், “ரொம்மென்” என்னுமிடத்தில் கட்டப்பட்ட முருகன் ஆலயம் இன்று திருக்குடமுழுக்கு செய்து வைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நோர்வேவாழ் சைவ அடியார்களதும், கொடையாளர்களதும் பங்களிப்போடு, தன்னலம் பாராமல் உழைத்த பலரது முயற்சியின் பெரும் பயனாக எழுந்துள்ள “நோர்வே அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம்”, ஆகமவிதிகளின்படி பூமி பூசை போடப்பட்டு, அத்திவாரம் அமைக்கப்பட்டு, தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட சிற்பக்கலைகளுடன் கூடிய கருங்கற்களாலான விமானம், பீடங்களோடு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாயகம் மற்றும் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த சிவாச்சார்ய குருக்கள்களினால் இன்று திருக்குடமுழுக்கு செய்து சிறப்பிக்கப்பட்ட முருகன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கூடியிருந்து திருக்குடமுழுக்கை கண்டுகளித்திருந்தனர்.

காணொளி இணைப்பு:

https://youtu.be/4tHmjnnky0Y

 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments