ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம் – பிரபல நாடு அதிரடி திட்டம்!

You are currently viewing ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம் – பிரபல நாடு அதிரடி திட்டம்!

உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கில மொழியை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டமூலத்தை இத்தாலி நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

‘இத்தாலி நாட்டு மக்கள் தங்கள் உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்பின் போது ஆங்கிலம் அல்லது வேறு எந்த வெளிநாட்டு மொழியையும் பயன்படுத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் 100,000 யூரோ (சுமார் 90 லட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சமர்ப்பித்துள்ளார். மீறி பயன்படுத்துவோருக்கு ரூ.89 லட்சம் அபராத விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சட்டமூலம் இன்னும் நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. இரு கட்சிகளும் இந்த புதிய நடவடிக்கைக்கு வாக்கெடுத்த பின்னரே இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

அப்படி நடைமுறைப்படும் பட்சத்தில், நிர்வாக ரீதியான பயன்பாடுகள் மட்டுமல்லாது, நிறுவன பெயர்கள், குறுஞ்ச்சொற்கள், உத்தியோகப்பூர்வ ஆவணங்கள், அன்றாட பேச்சுமொழி உட்பட அனைத்திலிருந்தும் ஆங்கிலம் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments