டிக் டாக்கை தடை செய்த முக்கிய நாடு!

You are currently viewing டிக் டாக்கை தடை செய்த முக்கிய நாடு!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் பிரித்தானிய அரசாங்கம் அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

பாதுகாப்பு கருதி பிரித்தானிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கூறுகையில்,

டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் தொடர்பில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments