ஆபிரிக்க நாடுகளிலும் “கொரோனா” பரவல் அவதானிக்கப்பட்டிருக்கிறது. “கானா” மற்றும் “காபோன்” ஆகிய ஆபிரிக்க நாடுகள், இன்று முதன் முறையாக “கொரோனா” தொற்று தமது நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
முறையே, நோர்வே மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து “கானா” வுக்கும், ” காபோன்” இருக்கும் சென்ற இருவருக்கு வைரஸ் தாக்கம் அவதானிக்கப்பட்டிருக்கிறது.
வறுமை நிலையிலிருக்கும் இந்த நாடுகளில், “கொரோனா” பரவலை தடுப்பதற்கான சரியான நடைமுறைகளோ அல்லது அதற்கான தொழிநுட்ப வசதிகளோ இல்லாததால், இந்நாடுகள் மிகப்பெரிய பாதிப்புக்களுக்கு ஆளாகலாம் என்பதால், இந்நாடுகளுக்கு தேவையான வசதிகளை, மேற்குலக நாடுகளும், வசதி படைத்த நாடுகளும் கொடுத்துதவ முன்வரவேண்டுமென உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.