ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்த பிரபல பிரித்தானிய நிறுவனம்!

You are currently viewing ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்த பிரபல பிரித்தானிய நிறுவனம்!

கடைசி நிமிட தினசரி ரத்துகளைத் தவிர்க்க, இந்த கோடையில் 1,700 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுது EasyJet விமான சேவை நிறுவனம். EasyJet நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் மொத்தமாக 180,000 பயணிகள் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. இந்த விமான சேவை ரத்தானது ஜூலை, ஆகஸ்டு, மற்றும் செப்டம்பர் மாதங்களில் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் தரையிறங்கும் EasyJet விமானங்களை பாதிக்கும்.

ஆனால், முன்பதிவு செய்துள்ள பயணிகளில் 95 சதவீதம் பேர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், 9000 பயணிகள் தற்போது சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

EasyJet நிர்வாகம் தெரிவிக்கையில், அவர்கள் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 1,800 விமானங்களை இயக்குகின்றனர் எனவும், இந்த ரத்து நடவடிக்கையானது உக்ரைன் போரினால் உரிய பாதுகாப்பான பாதை அனுமதிக்கப்படாததும், வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட காரணங்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பே தங்கள் விமானங்களை ரத்து செய்த பயணிகள் மற்றும் இதேபோன்ற விமானத்தில் முன்பதிவு செய்யப்படாதவர்கள் இழப்பீடாக £220 வரை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments