ஒஸ்லோ:
ஸ்வீடன் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விமானத் தொழில்நுட்ப நிறுவனமான “Saab”, எதிர்கால போருக்காக உருவாக்கப்படவுள்ள புதிய ஆளில்லா போர் விமானமான “A3-001” இன் முழு அளவிலான மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மனித விமானி இல்லாமல் செயல்படும் இந்த விமானத்தில் செயற்கை நுண்ணறிவு (AI), தன்னாட்சி தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவை முக்கியமாக இடம்பெறவுள்ளன.
A3 விமானம் தனியாக செயல்படுவதுடன், Saab-ன் “Gripen” போர் விமானங்களுடன் இணைந்து செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது. ஆபத்தான வான் பகுதிகளுக்குள் முதலில் ஆளில்லா விமானங்களை அனுப்பி, இலக்குகளை கண்டறிதல், தாக்குதல் மற்றும் “electronic warfare” போன்ற பணிகளை மேற்கொள்ளச் செய்வதே முக்கிய நோக்கமாகும்.
மேலும், விமானத்தின் “radar signature” குறைக்கப்பட்டு, அதிவேகமாக “supersonic” வேகத்தில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. ஆயுதங்களையும் விமானத்தின் உட்புறத்தில் வைத்திருக்கும் வகையில் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
Saab-ன் திட்டத்தின்படி, முதற்கட்ட சோதனை விமானங்கள் வரும் ஆண்டுகளில் சோதனை செய்யப்பட உள்ளன. 2030களின் நடுப்பகுதியில் A3 போன்ற முழுமையான ஆளில்லா போர் விமானங்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித விமானிகளுடன் AI-ஆல் இயக்கப்படும் ஆளில்லா போர் விமானங்கள் இணைந்து செயல்படும் புதிய போர்முறையை உருவாக்குவது Saab-ன் முக்கிய இலக்காக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
24.08.2026






