ஆழியவளையில் பட்டினி கிடக்கும் மக்களை பழிவாங்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்!

You are currently viewing ஆழியவளையில் பட்டினி கிடக்கும் மக்களை பழிவாங்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்!

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம மக்களுக்கு கொரோணா கடன் கொடுப்பனவான ரூபா 5000/- மக்களிற்கு வழங்காது அப்பகுதி சமுர்த்தி உத்தியோகத்தர் பழிவாங்குவதாக சமுர்த்தி உத்தியோகத்தரால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யுமாறு மூன்று மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்கள் கடிதம் எழுதியதன் எதிரொலியே இது என்றும்  இவரது பழிவாங்கல் தொடர்பில் முகாமையாளரிடமும் பிரதேச செயலருக்கும் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பலருக்கு பல மாதங்களாக சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாமல் இருப்பதும்  தெரியவருகிறது.

இந் நிலையில் தற்போது கொரோணா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தாம் எந்தவித வருமானமும் இன்றி தாங்கள் இருப்பதாகவும் பலர் உணவுப் பொருட்கள் இல்லாது வாடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவி்த்தனர்.

சமுர்த்தி உத்தியோகத்தர் தொடர்பில் பிரதேச செயலரிடம் மக்கள் ஏற்கனவே வழங்கிய கடிதத்திற்கு தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவரை பல தடவை தொடர்பு கொண்டும் பதில் கிடைக்வில்லை.பிரதி பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதேச செயலர் வெளியில் சென்றுள்ளதாகவு்ம அரை மணித்தியாலத்தின் பின் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்திருந்ததுடன் இவ் இடர் காலத்தில் இவ்வாறு வழங்காது நிறுத்த முடியாது என்றும் தெரிவித்தாகவும’ குறிப்பிட்டனர்.

இவ் இடர் காலத்தில் பரிதவிக்கும் மக்களை அதிகாரியொருவர் பழிவாங்குவதை வெளித் தெரிவிக்கும் மக்கள் இதற்கு தீர்வு காணக்கூடியவர்கள் யாராவது தங்களிற்கு உதவி செய்யுமாறும் ஏக்கத்துடன் வேண்டி நிற்கிறார்கள்

https://www.youtube.com/watch?time_continue=155&v=xHt4GF6wy_E&feature=emb_logo

நன்றி தாரகம்

பகிர்ந்துகொள்ள