குரோஷியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குரோஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதான் பால்கன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தொற்று அறிகுறியாகும். ஆஸ்திரியாவிலும் தொற்று இருப்பதாகக் கூறப்படுகின்றது.
குரோஷியாவின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்( Andrej Plenkovic ) இதை அறிவித்துள்ளார். நோயாளி ஜாக்ரெப்பில்(Zagreb) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒரு இளைஞன் என்றும் இது ஒரு இலேசான அறிகுறி மட்டுமே என்றும் கூறப்படுகின்றது. இந்த நோய்வாய்ப்பட்ட இளைஞன் கடந்த ஒரு வாரமாக இத்தாலியின் மிலனில் தங்கியிருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரியாவில், டைரோல் (Tyrol) மாநிலத்தில் இரண்டு தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,.பாதிக்கப்பட்ட இருவரும் இத்தாலியர்கள் என்றும் பெரும்பாலும் லோம்பார்டியில் (Lombardia) தங்கியிருந்தபோது பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.