தமிழர்களின் பண்டிகையான கார்த்திகைத் தீபத்திருநாளான இன்று இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் சொர்க்கப்பானை எரிப்பதற்கு சுன்னாகம் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்ட போதும் பின் சில மணி நேரங்களில் சொர்க்கப்பானை எரிப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதாக அவர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ. 29) ஞாயிற்றுக்கிழமை ஆலயங்களில் தீபமேற்றி சொர்க்கப்பானை எரிப்பது வழமை. வழமை போல இம் முறையும் ஆலயத்தில் ஏற்பாடு செய்த போது ஆலயத்தில் சொர்க்கப்பானை எரிக்க முடியாது என சுன்னாகம் பொலிஸாரால் இன்று நண்பகல் தடை அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
எனினும் இன்று பிற்பகல் அவ்வாறு தடை எதுவும் இல்லை ஆலயத்தில் வழிபாடுகளை நடத்த முடியும் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேரில் வந்து அறிவித்துள்ளார்.