“Google” நிறுவனத்தின் புகழ் பெற்ற இணைய உலவியான “Chrome” மீது நடத்தப்பட்ட இணையத்தாக்குதலில், மேற்படி உலவியின் நீட்சிகளை (Extensions) தரவிறக்கம் செய்த பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி உலவியின் 111 நீட்சிகளில் “உளவு பார்க்கும் செயலிகள்” பொதித்து வைக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான தாக்குதலுக்குள்ளான நீட்சிகள் 32 மில்லியன் தடவைகளை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் “Google” நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை தளமாக கொண்டு இயங்கும் சிறிய கணினி நிறுவனம் இதன் பின்னணியில் இருக்கலாமென்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், எனினும் இந்நிறுவனம் தாக்குதலை மறுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படும் அதே வேளை, மேற்படி தாக்குதலுக்குள்ளான நீட்சிகளை, பயனாளர்களின் கணினிகளிலுள்ள “Anti – Virus” செயலிகளும் கண்டறியாதபடி மிக நுட்பமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலுக்குள்ளான நீட்சிகளை தடை செய்திருப்பதாக “Google” நிறுவனம் தெரிவித்துள்ளது.