பதவிக்காக சீன அதிபரிடம் கெஞ்சிய அமெரிக்க அதிபர்! அமெரிக்க அதிபரின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தகவல்!!

You are currently viewing பதவிக்காக சீன அதிபரிடம் கெஞ்சிய அமெரிக்க அதிபர்! அமெரிக்க அதிபரின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தகவல்!!

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தான் வெல்வதற்காக சீனா உதவ வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் “Xi Jing Ping” இடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாக, அதிபர் டிரம்ப் இன் முன்னாள் பாதுகாப்பது ஆலோசகராகவிருந்த “John Bolton” தனது புதிய புத்தகமொன்றில் குறிப்பிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

“G – 20” நாடுகளின் மாநாடொன்றில் அமெரிக்க அதிபரும், சீன அதிபரும் கலந்துகொண்டிருந்தபோது, எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெல்வதற்காக சீன அதிபர் உதவ வேண்டுமென அதிபர் டிரம்ப் சீன அதிபரிடம் கேட்டுக்கொண்டதாகவும், அமெரிக்காவிடமிருந்து சோயா, கோதுமை உள்ளிட்ட விளை பொருட்களை சீனா அதிகாலையில் கொள்முதல் செய்தால், அமெரிக்க விவசாயிகளின் உற்பத்தி பெருகும் என்றும், அதனால், விவசாயிகள் அனைவரும் தனக்கே வாக்களிப்பார்கள் என்றும் அதிபர் டிரம்ப், சீன அதிபரிடம் தெரிவித்திருந்ததாகவும் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“The Scandal of Trump’s China Policy” என்ற தலைப்பிலான மேற்படி புத்தகத்தில், தானே மீண்டும் அதிபராகும் விதத்தில், அமெரிக்க உள்நாட்டு அரசியலில் சீனா தனக்கு உதவவேண்டுமென அதிபர் டிரம்ப் சீன அதிபரிடம் வேண்டிக்கொண்டதாகவும், இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை பின்தள்ளிவிட்டு, தனது பதவியே பிரதானமென அதிபர் டிரம்ப் காய்களை நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள “Washington Post” பத்திரிகை, அதிபர் பதவிக்காக, சீனாவின் மனிதவுரிமை மீறல்களைக்கூட கண்டும் காணாததுபோல் இருப்பதற்கு அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

23.06.2020 அன்று இப்புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட இருப்பதாகவும், எனினும் மேற்படி புத்தகம் அமெரிக்க பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாக இருப்பதால் அதை தடை செய்வதற்காக நீதித்துறையை நாடியுள்ள அமெரிக்க நீதியமைச்சு, மேற்படி புத்தகத்தில் இரகசியமானவை என முத்திரையிடப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் அதனை தடை செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த இப்புத்தகத்தை எழுதிய “John Bolton”, அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் பாதுகாப்பு ஆலோசகராக சுமார் 17 மாதங்கள் பணியாற்றியபோது அவருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை இப்புத்தகத்தில் வெளியிட்டிருப்பதாகவும், வட கொரியா மற்றும் ஆப்கனிஸ்தான் தொடர்பில் அதிபர் டிரம்ப் இன் அனுகுமுறை குறித்து எழுந்த கசப்புணர்வுகளால் “John Bolton” அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகியதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள