இத்தாலியில் இதுவரை 50 சுகாதார பணியாளர்கள் மரணம்!

You are currently viewing இத்தாலியில் இதுவரை 50 சுகாதார பணியாளர்கள் மரணம்!

கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. இன்றுவரை 50 மருத்துவர்கள் covid 19 இனால் உயிரிழந்துள்ளனர். அதிலும் அதிகமானோர் குடும்ப வைத்தியர்கள் எனவும் சிலர் பல் மருத்துவர்கள், தொற்று நோய் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களும் உள்ளடங்குவர்.

அதிகூடிய நேரம் வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நெருங்கியத் தொடர்பில் இருப்பதனால் இவர்களே கொரோனாவைரசுத் தொற்றுதலுக்கு இலகுவாக உள்ளாகிறார்கள். இதனால்தான் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 9% சகவீதம் சுகாதார பணியாளர்களாக உள்ளனர் என இத்தாலிய உயர் சுகாதார நிறுவனதின் 26 மார்ச் 2020 இன் தரவுகள் கூறுகின்றன.

British Medical Journal இல் வெளியிட்டுள்ள இத்தாலிய மருத்துவர்களால் எழுதப்பட்ட கடிதத்தில், மருத்துவர்கள் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த சில உடனடி நடவடிக்கைகளைக் எடுக்குமாறும், உடனடியாக தற்பாதுகாப்பு உபகரணங்களின் விநியோகங்களை மேற்க்கொண்டு அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் (தொற்றுக்குரிய சிறிய அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கும் கூட) விரைவான பரிசோதனைகளைச் செய்யும் படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சுகாதார பணியாளர்களை பாதுகாப்பதே அதி முக்கியமானது, ஏனெனில் அவர்கள் தான் எங்களது அளவில்லாத சொத்து. தற்போது இருக்கும் கடுமையான காலகட்டத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு மிகப் பெரிய உதவியை அவர்கள் செய்துவருவதாக உயர் சுகாதார நிறுவனத்தின் தலைவர் Silvio Brusaferro தெரிவித்தார். அத்துடன் அவசியமான தற்பாதுகாப்பு சுகாதார உபகரணங்களை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று மேலும் வலியுறுத்தியுள்ளார்

பகிர்ந்துகொள்ள