இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை!

You are currently viewing இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை!

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை அந்த நாட்டு வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா கொழும்புவில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இலங்கையின் உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இதில் முக்கியமாக, இலங்கைக்கு உரம் கொடுத்து உதவுமாறு அமரவீரா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இலங்கையின் யாலா பருவ சாகுபடிக்காக 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா சமீபத்தில் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், இலங்கை மந்திரியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply