இந்தியாவில் இன்று சனிக்கிழமை காலை 8 மணி வரையான கடந்த 24 மணி நேரங்களில் 3 இலட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3,890 பேர் நேற்று கொரோனாவுக்குப் பலியாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்டுள்ள நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2 கோடியே 43 இலட்சத்து 72 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 ,லட்சத்து 66 ஆயிரத்து 207 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 3 இலட்சத்து 53 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 4 இலட்சத்து 32 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரையான தரவுகளில்படி நாடு முழுவதும் 36 இலட்சத்து 73 ஆயிரத்து 802 பேர் வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 18 கோடியே 4 இலட்சத்து 57 ஆயிரத்து 579 பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் தினசரி தொற்று நோயாளர் தொகை 4 இலட்சத்தைக் கடந்து பதிவாகிவந்த நிலையில் இந்த எண்ணிக்கை சற்று குறைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.