இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் குறைந்தது : மத்திய அரசு!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் குறைந்தது :  மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மத்திய அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின்
தலைமை விஞ்ஞானி கங்காகேத்கர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

லாவ் அகர்வால் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையான காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக 2.1 மடங்காக அதிகரித்தது.

ஆனால், ஏப்ரல் 1 முதல் 1.2 மடங்காக மட்டுமே அதிகரித்துள்ளதாகவும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும், சராசரி அதிகரிப்பு விகிதம், 40 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் குணமடைவோர் மற்றும் உயிரிழப்பு 80-க்கு 20 என்ற விகிதத்தில் இருப்பதாகவும், இது மற்ற நாடுகளைவிட அதிகம் என்றும் அகர்வால் குறிப்பிட்டார். தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான பணிகளை வேகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.

மேலும் ஊரடங்குக்கு முன்பான காலத்தில், ஒட்டுமொத்த பாதிப்பு அளவு 3 நாட்களில் இரட்டிப்பாக மாறிவந்தது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் இரட்டிப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.அடுத்த மாதத்துக்குள் உள்நாட்டிலேயே 10 லட்சம் அதிவிரைவு பரிசோதனைக்கான கருவிகளை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனாவுக்கு காசநோய் தடுப்பு மருந்தை பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரத்தில் ஆய்வைத் தொடங்க உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி சபையின் விஞ்ஞானி கங்காகேத்கர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள