இந்தியாவில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்வு!

இந்தியாவில் மேலும் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டொர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, 169,797 அதாவது, வைரஸால் பாதிக்கப்பட்டு 50 விழுக்காடுக்கும் அதிகமானோர் தொற்றுநோயிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைவதற்கு 34 நாட்கள் என்பதை 74 நாட்கள் என தாமதம் ஏற்படுத்தி உள்ளளதாக ICMR ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில், மே மாதத்திலேயே 7 இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 21 மாநிலங்களில் கொரோனா அதிகம் பாதித்த 69 மாவட்டங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, மே மாத தொடக்கத்தில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரம் பேர் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால், ஐ.சி.எம்.ஆர். ஆய்வில், மத்திய அரசு கூறியதை விட 20 மடங்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியான முடிவுகள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100ஐ எட்டியபின், ஒரு இலட்சத்தை எட்டுவதற்கு 64 நாட்கள் ஆனது. ஆனால், 2 இலட்சத்தை எட்டுவதற்கு வெறும் 14 நாட்களும், 3 இலட்சத்தை எட்டுவதற்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.

இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைவதற்கு 34 நாட்கள் என்பதை 74 நாட்கள் என தாமதம் ஏற்படுத்தி உள்ளது.

எனவே, நவம்பர் மாதம் மத்தியில்தான் பாதிப்பு உச்சம் தொடும். மேலும், தொற்று பாதிப்பு அளவை 97 விழுக்காட்டிலிருந்து 69 விழுக்காடாக குறைக்க உதவி உள்ளது. இதனால் சுகாதார உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை அளித்துள்ளது.

ஊரடங்கைப் பொறுத்தவரையில் அது கொரோனா தொற்று உச்சம் அடைவதை தாமதப்படுத்தும். தொற்றுக்கு பதில் அளிப்பதற்கு சுகாதார அமைப்புக்கு அவகாசம் வழங்கும். குறிப்பாக சோதனை செய்தல், நோயாளிகளை கண்டறிதல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், தொடர்பு தடம் அறிதல் ஆகியவற்றை தற்போது செய்வது போல தடுப்பூசி கிடைக்கின்றவரை தொடர்ந்து மேற்கொண்டால் தொற்றின் பாதிப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள