இந்தியாவுக்கு எதிரான முதல் தொடர் போட்டியின் 2வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 51 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது துடுப்பாட்ட தொடர் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. ‘நாணய சுழட்சியில்’ வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களம் இறங்கி விளையாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் (34), பிரித்வி ஷா (16) ஒட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து இந்திய அணி குறைந்த ஒட்டங்களில் இலக்குகளை இழந்தது.
இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது முதல் சுற்றில் 55 பந்து பரிமாற்றங்களில் 5 இலக்குகளுக்கு 122 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது ரஹானே 38 ஓட்டங்களுடனும் (122 பந்து, 4 நான்குகள்), ரிஷாப் பண்ட் 10 ஓட்டங்களுடனும் (37 பந்து) களத்தில் இருந்தனர். அதன் பிறகு மழை கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. அதன் முடிவில் இந்திய அணி 68.1 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 இலக்குகளும், டிரண்ட் போல்ட் ஒரு இலக்குகும் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லாதம், டாம் பிளண்டெல் ஆகியோர் களமிறங்கி விளையாடினர். அந்த அணியில் அதிக அளவாக வில்லியம்சன் (89), டெய்லர் (44) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். லாதம் (11), பிளண்டெல் (30), நிக்கோல்ஸ் (17) ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அந்த அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 71.1 பந்து பரிமாற்றங்கள் முடிவில் 5 இலக்குகள் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் எடுத்துள்ளது. வாட்லிங் (14), கிராண்ட்ஹோம் (4) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 51 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.