இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையான 24 மணி நேரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.
இன்று காலை வரையான 24 மணி நேரங்களில் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இக்காலப்பகுதியில் மேலும் 839 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் இதுவரை தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 33 இலட்சத்து 58 ஆயிரத்து 805 ஆக உயர்ந்தது.
நாட்டின் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 1 இலட்சத்து 69 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 584 பேர் குணமடைந்தனர். இவற்றுடன், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சத்து 81 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தொற்று நோயுடன் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 8 ஆயிரத்து 87 ஆகப் பதிவாகியுள்ளது.
பாதிவான உத்தியோகபூா்வ தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 90.44% வீதம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1.27% வீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 35 இலட்சத்து 19 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இவற்றுடன் இதுவரை மொத்தமாக 10 கோடியே 15 இலட்சத்து 95 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.