இந்த ஆண்டிலாவது இழிநிலை அகலவேண்டும்!

You are currently viewing இந்த ஆண்டிலாவது இழிநிலை அகலவேண்டும்!

பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்ததன்பின் சிங்கள அரசு தமிழ் மக்களின் தேசிய உணர்வை நசுக்கும் அல்லது அழித்தொழிக்கும் நோக்குடன் பல சட்ட திட்டங்களைப் புகுத்தியது. S. W. R. D. பண்டாரநாயக்கா, தமது குறுகிய சுய நல நோக்கிற்காகக் (Sinhala Only) சிங்களம் மட்டும் அரசியல் மொழியாகப் பிரகடனப்படுத்தப்படுத்தினார். இதனால் சிங்களம் கற்காத தமிழர்களுக்கு அரசஸ்தாபனங்களில் வேலை வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. சர்வகலாசாலைகளில் தமிழ் மாணவர்களுக்கான அனுமதி, அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக மாற்றி அமைக்கப்பட்டது. தமிழ் பகுதியில் அரச முதலீடுகள் மிகச் சொற்பமாகக் குறைக்கப்பட்டன.

பாதுகாப்புப் படைக்கு தமிழர்களின் உள்வாங்கல் படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று ஏறத்தாழ பாதுக்காப்பு படை முழுக்க முழுக்க சிங்களவர்களாகவே உள்ளது. அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்களினால்; பல தமிழ் பகுதிகள் முழுமையாகவே அழிக்கப்பட்டு சிங்களவரால் குடியேற்றப்பட்டன. பல இடங்களின் பெயர்களும் சிங்களமயமாக்கப்பட்டன. அரச குடியேற்றத் திட்டங்கள் 1950 அளவிலேயே ஆரம்பிக்கப்பட்டாலும் 1980 அளவில் மிகமிக மும்மரமாக உத்வேகம் அளிக்கப்பட்டன. ஆனால் அனைத்திற்கும் மேலாக 1958 முதல் தொடர்ச்சியாக தமிழ் மக்கள்மேல் அவிழ்த்து விடப்பட்ட அரசியல் பயங்கரவாதம் தமிழ் மக்களின் அடிப்படைப் பாதுகாப்பு உரிமையையும் வாழ்வுக்கான உத்தரவாத உரிமையையும் கேள்விக்குறியாக்கின. இலங்கைத் தீவு பிரித்தானிய அரசிடமிருந்து 1948இல் சுதந்திரமடையுமுன்பும், பின்பும் ஏனைய இன மக்களுக்கான பாதுகாப்பு வரையறைகள் 1972 இல் ஒரு தலைப்பட்சமாகக் கொண்டுவரப்பட்ட குடியரசு அரச சட்டயாப்பினால் நிராகரிக்கப்பட்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களும் இலங்கை அரசின் பிரஜைகளா என்பதற்கான பதிலைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இவ்விக்கட்டான நிலையே இலங்கை வாழ் தமிழ் மக்களைத் தம் பூர்வீக நிலத்தை மீண்டும் தமக்குரியதாக ஆக்கும் பாரிய வரலாற்றுத் தேவைக்கு இட்டுச் சென்றது. இதன் பிரதிபலிப்பே 1959 இல் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் அவர்கள் உருவாக்கிய ஈழத்தமிழ் ஒற்றுமை முன்னணியாகும். பண்டைய யாழ்ப்பாண இராட்சியப் புலவர்களும் அவர்தம் பாடல்களும் முறையே ஈழப்புலவர்கள், ஈழ நாட்டுப் பாடல்கள் என இலக்கியங்களில் குறிப்பி;டப்பட்டிருந்தபோதும், இலங்கைத் தமிழர்கள் தம் பூர்வீக நாட்டை மீளப் பெறும் பணியில் அரசியல் வட்டாரத்தில் “வன்னிச் சிங்கம்” என அழைக்கப்பட்ட சி.சுந்தரலிங்கம் அவர்களே “ஈழத்தமிழ்” சொற்றொடரை முதன் முதலாகப் பாவித்து தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். திரு. சுந்தரலிங்கம் அவர்களின் ஈழத்தமிழச்; சுதந்திரத்திற்கான அறைகூவல் வரலாற்று தேவையால் பின்வரும் பின்னணியில் எழுந்ததொன்றாகும்.

1. 1956இல் கொண்டு வரப்பட்ட ‘சிங்களம் மட்டும்’ அரச மொழிச் சட்டம்

2. 1958இல் திரு. பண்டாரநாயக்காவின்; ஒருதலைப்பட்சமான ‘பண்டாரநாயக்கா – செல்வநாயகம்’ ஒப்பந்தம் மீறல்

3. 1958இல் தமிழ் மக்களுக்கெதிரான இன கலவரமும் அரச பயங்கரவாதக் கட்டவிழ்பபும்;

4. அரசுப்படை நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டமை

5. 1958இல் எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டு சிறையி;டப்பட்டமை.

ஆயினும் 1960 அளவில் திரு. சுந்தரலிங்கத்தின் அறைகூவல் தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் உணர்வைத் தட்டியெழுப்புவதாக அமையவில்லை. இக்காலப் பகுதி ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் செயற்பாடற்ற ஒரு பகுதியாயினும், விடுதலை வித்துக்கள் விதைக்கப்பட்ட காலமாகும். அவ்வகையில் விடுதலை வரலாற்றின் பரிணாம வளர்ச்சியின் முதல் வடிவத்தை இங்கே சந்திக்கின்றோம்.

ஆனால் 1972இல் பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சுதந்திர அரசியல் சட்ட யாப்பை வாபஸ் பெற்று புதிய குடியரசு சட்டயாப்பை தமது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் ஒருதலைப் பட்சமாகத் திணித்து அதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்த போதுதான் தமிழ் மக்கள் இனிமேல் மாற்ற முடியாத தமது தலைவிதியை உணர்ந்தார்கள்.

தாம் இலங்கை தீவில் இரண்டாம்தர பிரஜைகளே என்பது தெளிவாகிய போதே தமிழ் மக்கள் தமது பூர்வீக பூமியை மீளப் பெற்று சுதந்திரமாக வாழ முனைப்புற்றார்கள். இக்காலப் பகுதியே விடுதலை வரலாற்றின் பரிணாம வளர்ச்சியின் இரண்டாம் வடிவமாகும்.

விடுதலை வரலாற்றின் முதலாம் வடிவம் செயற்பாடற்ற, வடிவமாக அமைந்திருந்த பொழுதிலும், இரண்டாம் வடிவம் அகிம்சைவழி அரசியற் போராட்ட வரலாற்றுக் காலமாக அமைந்திருந்தது.

தமிழ் மக்கள் தம்மேல் ஒருதலைப்பட்சமாகத் திணிக்கப்பட்ட குடியரசு அரசியலச்; சட்டயாப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை நிரூபிக்கத் தமிழரசுக் கட்சித் தலைவர் S. J. V செல்வநாயகம் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து மீண்டும் ஓர் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டார்.

இத்தேர்தலில் அமோக வெற்றிப்பெற்ற தந்தை செல்வா, தமிழ் மக்கள் இனிமேல் தமது ஈழத்தமிழ் அரசை நிறுவுவதைவிட வேறுவழியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும், எனவே தமது கட்சி தமிழ் மக்களின் இவ்வரலாற்றுத் தேவையை எவ்வகையிலும் பூர்த்திச்செய்ய உழைக்கும் எனவும் பாராளுமன்றத்திலே பகிரங்கமாக அறிக்கையிட்டார்.

இச்சூழலிலே வெவ்வேறு கட்சிகளாகப் பிரிந்து நின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து 1976இல் “தமிழர் விடுதலைக் கூட்டணி’யை உருவாக்கினர். அதன் முதல்த் தேசிய பெதுக்கூட்டத்தில் தமிழ் மக்கள் தமது தாயகமாகிய தமிழ் ஈழத்தை மீண்டும் இஸ்தாபிப்பதே தம் தலையாய பணியாக ஏகமனதாக அறிக்கையிட்டனர்.

மீண்டும் 1977இல் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் ஈழத்தாயகத்தை இஸ்தாபிப்பதற்கென்றே தம்மைத் தேர்வு செய்யக்கோரி மிக அதிகப்படியான வாக்குகளுடன் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுச் செய்யப்பட்டனர். கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இதைத் தெளிவுபடுத்தி, இக்குறிக்கோளை அமைதியான வழியிலோ அன்றேல் போராட்ட ரீதியிலோ பெற்றெடுக்கப்போவதாகக் கூறுகின்றது.

எனவே தமிழீழக் கொள்கை ஆயுதம் தாங்கிய போராளிகளால் 1980 அளவில் உருவாக்கப்பட்டதொன்று என்பது வரலாற்றக்குப் புறம்பானதாகும். தமிழீழ நிலைப்பாடு முதிர்ந்த அரசியல் வாதிகளால் தமிழ் மக்;கள் நிலைகண்டு, அவர்கள் வரலாற்றுத் தேவையாகப் படிப்படியாக எடுக்கப்பட்ட தீர்க்கமான ஒரு முடிவாகும். இக்குறிக்கோளை அடைய தமிழ் அரசியல் வாதிகள் அகிம்சை வழி நின்று போராடினார்கள்.

ஆனால் அப்பொழுதெல்லாம் அவர்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்கரவாதமே 1970 அளவில் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு இட்டுச்சென்றது என்பதே வரலாறு கூறும் உண்மையாகும். தமிழ் மக்களுக்கெதிரான அரச பயங்கரவாதத்தில் 1958இலிருந்து மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, அவர்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட போதெல்லாம் அவர்கள் ஆயுதம் தாங்கிப் போராட வில்லை மாறாக, நிராயுதபாணியான தமிழ் மக்கள் மீதே அரச பயங்கர வாதமும் இனவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

தம்மைப் பாதுகாக்க, தம் இனத்தைப் பாதுகாக்க, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராட ஆரம்பித்தார்கள். இப்போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற சிங்கள அரசும் தன் அடக்குமுறையை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே சென்றது. தமிழர்களின் ஆயுதம் தாங்கிய போராட்ட வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது 1983 கறுப்பு ஜுலை ஆகும். இலங்கை பிரஜைகள் எனக் கூறிக்கொள்ளும் எவரும் அவமானப்படக் கூடியதான தமிழர்களுக்கெதிரான இனக் கலவரம் தமிழ் இளைஞர்களை அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் உத்வேகத்தோடு முன்செல்லவைத்தது. இளைஞர்களின் ஆயதம் தாங்கிய போராட்ட வரலாற்றின் ஆரம்ப காலத்தில் பாரத தேசத்ததின் பங்கினையும் ஈழத்தமிழர் விடுதலைப் போரட்ட வரலாறு மறுக்க முடியாது. மிகவும் விசேசமாக 1983 கறுப்பு ஜுலை தமிழகத்தில் உணர்வு அலைகளைப் பிறப்பித்தது. தமிழக அரசின் உந்துதலால் பாரத அரசும் இளைஞர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பல வழிகளிலும் துணை நின்றது.

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றின் மூன்றாம் வடிவம் இரத்தக் களரியான ஒரு வடிவமாக அமைந்தது மிகத் துர்அதிர்ஷ்டவசமே. ஆனால் முதிர்ந்த தமிழ் அரசியல்வாதிகளுடைய அகிம்சை வழிப் போரட்டம், அதாவது வரலாற்றின் இரண்டாம் வடிவம், எதிர்பார்த்த எப்பலனையும் அளிக்காத பட்சத்தில் இளைஞர்கள் அவ்வழிப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்தது இயற்கையே. மேலும் மிக துர்அதிஸ்டவசமாகப், புற்றீசல் போல் உதித்த பல போராட்டக் குழுக்கள் தமிழீழப் போராட்டத்தை ஓரளவு முன்னெடுத்துச் சென்ற போதிலும்;, உரிமைக் காக்கப் புறப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஆரம்பக் குறிக்கோளுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவில்லை.

பல தடவைகளில் தனி நபர்களின் ஒழுக்கக் கேடும், சில இயக்கங்களின் நடைமுறையும் போராட்டக் குழுக்களுக்கிடையே பகைமையை வளர்த்துச் சகோதரக் கொலைகளில் முடிந்தது. இந்த உட் பூசல்களினால் சில இயக்கங்கள் அழிந்தொழிந்தன, சில இன்றும் பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பக் காலத்திலேயே உருவாகி இன்றும் போராட்டப் பாதையில் உரிமைக்குக் குரல் கொடுக்கும் இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னை வலுப்படுத்தி உருவாக்கி இருக்கின்றது. இவர்கள் குறிக்கோளின் வைராக்கியமும் ஆயத பலமும் இவர்களை இன்று ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தலைமைக்கு இட்டுச் சென்றதுள்ளது.

தமிழ் இளைஞர்களின் ஆயதம் தாங்கிய போராட்டத்தை எந்தவொரு வகையிலும் நசுக்க முடியாத இலங்கை அரசு, இந்திய அரசின் அனுசரணையுடன் 1985 இல் திம்பு நகரில் பேச்ச வார்த்தை நடத்தியது. ஈழத்தமிழர் தரப்பின் ஏக மனதான நிலைப்பாடுகள் இங்கே தெளிவாக எடுத்துக் கூறப்பட்டன. ஆனால் இலங்கை அரசு ஈழத்தமிழரின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க மறுத்ததில் இப்பேச்சு வார்த்தைகள் எவ்வித பயனுமின்றி முறிவடைந்தன.

இதனைத் தொடர்ந்து 1987 இல் இலங்கை ஜனாதிபதி J.R. ஜெயவர்த்தனாவுக்கும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்குமான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு அதன்படி தமிழ் பிரதேசங்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் ஒரு வகையான சுய ஆட்சி முறை ஏற்றக் கொள்ளப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டப்படி அதிகாரப் பரவலாக்கல் மூலம் சுய ஆட்சி வழங்க காலம் தாழ்த்தியது, இதனை இந்திய அரசு அழுத்தங்களினாலும் சாதிக்க முடியாத நிலை உருவானது. மீண்டும் துர்அதிர்ஷ்டமாக, அமைதி காக்க வந்த இந்தியப் படையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மோதலில் ஈடுபட்டனர் பல நூற்றக்கணக்கான புலிகளும், இந்தியப் படைகளும் பொது மக்களும் செத்து மடிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மீண்டும் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவுடன் 1989-90 இல் விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தை நிகழ்த்தினர். அவர்கள் இடையில் ஏற்பட்ட கருத்தொருமைப்பாட்டினால் இந்திய அரசப் படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் இப்பேச்சு வார்த்தைகளும் தீர்க்கமான எந்தவொரு முடிவையும் எட்டாமலே முறிவடைந்தன.

இவ்வாறு போருக்கும், பேச்சுவார்த்தைக்கும் இடையில் மாறி மாறித் தொடர்ந்து ஈழத்தமிழர் விடுதலை வரலாற்றின் மூன்றாம் வடிவம் 2002 இல் விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப் படுத்தி அனுசரித்து வருகிற போர் நிறுத்தத்துடன் புதிய ஒரு வடிவத்தில் நுழைந்துள்ளது. இப்போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, முன்னால் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் நிறுத்தப்பட்டு, நோர்வே அரசின் அனுசரணையுடன் மூன்று வட்டப் பேச்சு வார்த்தைகள் நடந்தேறியுள்ளன.

மாறி மாறி பலபேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் எதுவும் தமிழ்மக்களின் வேணவாவை அங்கீகரிக்காததால் பேச்சு வார்த்தை முறிவுக்கு வந்து போர் தொடங்கியது. பெரும் பலத்துடன் இருந்த விடுதலைப்புலிகளை அழிக்க திராணியற்ற சிறீலங்கா அரசு பல வல்லரசுகளின் துணையோடு தமிழர்கள் மீதும் தமிழர்களின் விடுதலை இயக்கம் மீதும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இனவழிப்பை செய்து முடித்தது.

ஆனாலும் தமிழீழ விடுதலைக்கான அரசில்போர் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால் எந்த நிலையிலும் தமிழ் மக்களின் வேணவாவை விட்டுக்கொடுக்காத விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாடுதான் இன்றைய நிலையிலும் உறுதியோடு தமிழ்த்தலமைகளாலும் தமிழ்மக்களாலும் முன்னெடுக்கப்படவேண்டும் இதை கடந்து போனால் நாம் நடந்து போவதற்கு கூட பாதையின்றி இரவல் மனிதர்களாக்கப்படுவோம் இந்த தவறை இராசதந்திரம் எனும் போர்வையில் அரசியல் தலமைகள் செய்யக்கூடாது.

உங்களுடைய தவறான வழிகாட்டுதலே இன்று இனவழிப்பாளிகளை எங்கள் பண்பாட்டு நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கொண்டாடுகின்ற துன்பியல் நிகழ்வுகள் சாதரண மக்களாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது இந்த இழி நிலை தடுக்கப்படவேண்டும் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டிப் போராடும் புலம்பெயர்ந்த மக்களோடு நிலத்து மக்களும் நேர்கோட்டில் நடக்கவேண்டும் இல்லையேல்  தமிழ் மக்களின் பூர்வீகநிலமென்ற சொல்லாடல் கொல்லப்பட்டு ஜக்கிய இலங்கை என்ற திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் இப்போது நீங்கள் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதுபோல் எங்கள் எதிர்கால சந்ததிகளின் வாழ்வும் தொடர்கதையாக மாறிவிடும்  அந்த இலக்கை நோக்கித்தான் எதிரி பயணிக்கின்றான் என்பதையும் நீங்கள் விளித்துப்பார்கவேண்டும் இந்த புதிய ஆண்டிலாவது அடிவருடும் மனநிலை அகன்று புரட்சிகர சிந்தனை புலரும் என எதிர்பார்க்கின்றோம்.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments