தமிழினத்தைக் கருவறுத்த இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் யாழ் வருகைக்கு எதிராக போராட்டம் – காணொளி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், வடக்கு – கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களைக் கண்டித்தும் யாழ். மாவட்ட செயலகம் முன்பு இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
தமிழின அழிப்பு நடத்தியதில் முதன்மையான இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனணியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது
![இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் யாழ் வருகைக்கு எதிராக போராட்டம்! 1](https://api.thaarakam.com/Images/News/2022/3/1E6kF4PvGqNu2BbzOXvj.jpg)
![இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் யாழ் வருகைக்கு எதிராக போராட்டம்! 2](https://api.thaarakam.com/Images/News/2022/3/YXJAFuyl5uop5ky3XGq3.jpg)
![இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் யாழ் வருகைக்கு எதிராக போராட்டம்! 3](https://api.thaarakam.com/Images/News/2022/3/GozWBiyRMhcHr1iCP94o.jpg)
![இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் யாழ் வருகைக்கு எதிராக போராட்டம்! 4](https://api.thaarakam.com/Images/News/2022/3/Ms9FLJ0MwU8ckVxWgvHi.jpg)
இலங்கையில் பெருங்கற் காலத்தவர்கள் வாழ்ந்தாக நம்பப்படும் வரலாற்றுச் சான்றுகள் மீட்கப்பட்ட இடங்களில் கந்தரோடை பிரதானமானதாகும்.
செக்கு உட்பட்ட தமிழர்களின் மிகத் தொன்மையான அறிவியல் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கந்தோடையில் காணப்பட்டுள்ளன.தமிழரின் பூர்வீக மண்ணை அபகரிக்கும் நோக்குடனே பிரதமர் இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ச அடிக்கல் நாட்டவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது.