2022இல் பொருளாதார வீழ்ச்சியால் உருவான எரிபொருள் நெருக்கடிக்கான பொறுப்பை தனிமனிதனில் கட்டி, அதற்கான பொறுப்பில் இருந்து தப்பியோட முனைந்தது சிறிலங்கா அரசு. பாராளுமன்றின் நடவடிக்கையை (உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை) கொள்கைரீதியில் அணுகி , இது அரசின், அரச கொள்கையின் வீழ்ச்சியேயன்றி,
இது தனி ஒருவரின் தலையில் கட்டி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியோடும் கண்ணாமூச்சி ஆட்டம் கிடையாது என அரசியல் தெளிவுடன் பாராளுமன்றில் முழங்கியவர் கஜேந்திரகுமார் .
சொந்த கூட்டத்தாலேயே குழிபறிக்கப்பட்ட உதய கம்மன்பில கஜேந்திரகுமாரின் தாயாரின் வீட்டை முற்றுகையிடுகிறார்
உதய கம்மன்பிலவுற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அணுகும் போது மட்டும் அல்ல , ஆரம்பம் முதலே அவர் ஒரு இனவாதி என்பது வெளிப்படையாக தெரிந்திருப்பினும், அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொள்கைரீதியாகவே அணுகியவர் கஜேந்திரகுமார்.
ஆனால், அதற்கு நன்றியாக உதய கம்மன்பில, கஜேந்திரகுமாரை எதிர்க்க கூடாது என நாம் கூறவில்லை- எந்த எதிர்ப்பும் கொள்கைரீதியானதாக உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையான தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கூட்டுமனநிலை இது தான் என்பதை கம்மன்பில கும்பல் மீண்டும் நிரூபித்திருக்கிறது.