உலக வானொலி தினத்தை முன்னிட்டு, வானொலித் துறையைச் சார்ந்தோருக்கும் மற்றும் வானொலி நேயர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
உலக வானொலி தினம் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் மேலும் வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
தமிழ்முரசம் வானொலி என்றென்றும் எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு,
எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதோடு,
என்றும் அறிவித்தல், தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற அடிப்படை அம்சங்களோடு உங்கள் கரம்பிடித்து பயணிக்கும் என்று கூறி, நேயர்கள் அனைவருக்கும் எமது உலக வானொலி தின நல்வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.