இயற்கை அனர்த்தம் : ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

  • Post author:
You are currently viewing இயற்கை அனர்த்தம் : ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஐப்பான் நகர் மியாகியில் இருந்து 50 கிலோ மீட்டதொலைவில் பசிபிக் கடற்பரப்பிற்கு அடியில் 41.7 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக கணக்கிட்டுள்ளது.சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதிகாலை 5:30 மணிக்கு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐப்பானில் இதுபோன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட காரணம் அந்நாடு பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் அமைந்துள்ளது. எனவே இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.

மியாகி மாகாணத்தில் 2011ஆம் ஆண்டு 130 கிலோமீட்டர் தொலைவில் 9.0 ரிக்டர் அளவில்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பெரிய சுனாமி உருவாகி புகுஷிமா அணு உலையை சேதப்படுத்தியது. இதில், கிட்டத்தட்ட 16,000பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள