“இரண்டாம் கட்ட போருக்கு நாங்கள் தயார்” – ஜெலன்ஸ்கி சூளுரை!

You are currently viewing “இரண்டாம் கட்ட போருக்கு நாங்கள் தயார்” – ஜெலன்ஸ்கி சூளுரை!

உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸில் ரஷ்ய ராணுவங்கள் மீண்டும் புதிய தாக்குதலை திங்கள்கிழமை முதல் முன்னெடுத்து இருக்கும் நிலையில் “டான்பாஸ் போர்” தொடங்கிவிட்டது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா ராணுவம் இனி கவனம் செலுத்தும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்க தொடங்கினர்.

நீண்டகாலமாக உக்ரைனின் கிழக்கு பகுதிகளான கார்க்கிவ், டொனெட்ஸ்க், மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை தாக்கி அதனை கைப்பற்ற தயாராகி கொண்டிருந்த ரஷ்ய படைகள் தற்போது தாக்க தொடங்கி இருப்பதாகவும், எத்தனை ராணுவ துருப்புகள் வந்தாலும் நாங்கள் எதிர்த்து சண்டையிடுவோம் என உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி தனது வீடியோ உரையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் தொலைக்காட்சியில் பேசிய அவர், இன்று அதிகாலை முதல் உக்ரைனின் கிழக்கு எல்லைகளான கார்க்கிவ், டொனெட்ஸ்க், மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளில் உள்ள நமது பாதுகாப்பு படைகள் மீது தீவிர தாக்குதலை ரஷ்ய ராணுவ படையினர் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனின் வடக்கு பகுதிகளில் இருந்து பின்வாங்கப்பட்ட ராணுவ துருப்புகள் மற்றும் பெலாரஸ் நாட்டில் இருந்து வந்துள்ள ராணுவ துருப்புகள் மூலம் இந்த பகுதிகளில் தங்களின் ராணுவ பலத்தை ரஷ்யா அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய ஜனாதிபதியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தனது டெலிக்ராம் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “உக்ரைனின் இரண்டாம் கட்ட போர் தொடங்கிவிட்டது, எங்களது ராணுவத்தை நம்புங்கள், இது மிகவும் பலமானது” என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments