ஜேர்மனியில் பொது இடங்களில் இரண்டு பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஜேர்மனியின் “Bild” பத்திரிகை தெரிவிக்கும்போது, தற்போதுள்ள அவசரநிலைமையில், மக்களுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்தை குறைக்குமுகமாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் இரண்டுபேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்படுவதாகவும், இதை மீறுபவர்களுக்கு 25.000 யூரோக்கள் வரை தண்டம் அறவிடப்படுமெனவும் தெரிவிக்கிறது.
எனினும், ஒரே குடும்ப அங்கத்தவர்களுக்கோ அல்லது ஒரே இடத்தில் பணிபுரிபவர்களுக்கோ இது பொருந்ததெனவும் அப்பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.