பெரு வெற்றிப் பயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல்பிரச்சாரப் பரப்புரை செய்தியை இருட்டடிப்பு செய்த தமிழ் பத்திரிகைகள்ஈழநாடு தவிர இன்றைய தமிழ் நாளிதழ்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இறுதிப் பிரச்சார கூட்டம் தொடர்பிலான செய்திகளை இருட்டடிப்பு செய்துள்ளன.அதுவும் ஜாம்பவானின் பத்திரிகை தனியே சுமந்திரனுக்கு செம்பு அடியோ அடியென்று அடித்துள்ளது.

தேசத்தின் விடியலுக்கான உண்மையான பயணத்தை மேற்கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சரியான திசையில் பயணிப்பதாலும் மக்கள் ஆதரவு பெருகி வருவதாலும் பத்திரிகை முதலாளிகளும், பத்திரிகை ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதன் விளைவே இந்த இருட்டடிப்பு…. எல்லா அயோக்கியத்தனங்களையும் தாண்டி முன்னணி முன்னேறும்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்