இலங்கைத்தீவு தமிழர்களின் தேசம் முதுகெலும்புள்ளவர்கள் என்னிடம் வாருங்கள் நிரூபித்து காட்டுகிறேன்-விக்கிரம்பாகு சவால்
இலங்கைத் தீவு ‘தமிழர் தேசம்’ என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முதுகெலும்பு இருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமாக விவாதத்திற்கு தயாரா என்று இலங்கை புத்த சமயத் தலைவர் ஒருவருக்கு மூத்த சிங்களக் கல்விமானான டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.
சிங்களவர்கள் தான் வந்தேறி குடிகள் என்பதையும் வடக்கு தமிழர்களின் பூர்விகம் என்ற யாதார்த்த பூர்வமான உண்மையையும் தேரருக்கு கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
வந்தேறி குடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோர முடியும்? என நாடாளுமன்ற உறுப்பினரா எல்லாமல மேதானந்தா தேரர் என்ற புத்த பிக்கு கூறியது தொடர்பில் கருத்துரைத்த போது விக்கிரமபாகு கருணாரட்னா இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: மேதானந்தா தேரர் ஒரு கல்விமானாக இருந்து கொண்டு வரலாறு தெரிந்தும் சிங்கள மக்கள் மகிழ்ச்சிப் படுத்துவதற்கு போலிக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு இது தான் வரலாறு, இதிகாசம் என்றும் காட்டி வருகிறார்.
விஜய மன்னன் இங்கு ஆட்சியின் போதுதான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள் தான் ஆட்சி செய்தனர்.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்கு பெயர்கள் இருக்கின்றன.
இது இந்தியாவில் இருந்த வந்தவர்கள் சிங்களவர்கள் என்று பறை சாற்றுகிறது
ஆனால் தமிழர்கள் அப்படியல்ல. அவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகவே கொண்டவர்கள்.