இலங்கையில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாய்வின் படி, சில மாகாணங்களில் சுமார் 88 வீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உணவுப் பாதுகாப்பு குறைந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.