கஜேந்திரகுமார் கைது – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விசனம்!

You are currently viewing கஜேந்திரகுமார் கைது – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விசனம்!

அரசியல் தீர்வையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஒடுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கான மற்றுமொரு உதாரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது அமைந்திருப்பதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டனத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்தி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவுகளிலேயே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா ரோஸ், அமைதியான முறையில் போராட்டமொன்றில் ஈடுபட்டமைக்காக தமிழ் அரசியல் தலைவரும் சிவில் உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை மிகுந்த விசனமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும், அவரது கைது கரிசனைக்குரிய விடயமாகவே காணப்படுவதாகவும் டெபோரா ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஈடுபட்டமைக்காக தமிழ் அரசியல் தலைவரும் சிவில் உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலைவரம் குறித்து நான் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பேன்’ என்று காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கல் பதிவிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ, ‘கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை மிகுந்த விசனத்தைத் தோற்றுவித்துள்ளது. அரசியல் தீர்வையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஒடுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கான மற்றுமொரு உதாரணமாக இச்சம்பவம் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments